பிரதமர் உரை
10.08.2020
(10.08.2020 அன்று பாரதப் பிரதமர் மோடி அவர்கள்
சென்னை-அந்தமான், நிக்கோபார் இடையேயான
‘கன்ணாடி இழை வட’ சேவை தொடக்க விழாவில் தூர்தர்ஷன்
மூலமாக உரையாற்றினார். அந்த உரையின் தமிழாக்கம்)
இந்தியச்
சுதந்திரத்தின் தவத்தலமான,
உறுதிமேற்கொண்ட தலமான அந்தமான் நிக்கோபார்
தீவுகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் வாழும் மில்லியன் கணக்கான தோழர்களுக்கு மட்டும் இந்த
நாள் முக்கியமானது அல்ல,
முழு நாட்டிற்கும் ஓர் முக்கியமான நாள்.
நண்பர்களே,
நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ்
அவர்களை வணங்கி, கடலடியில் கண்ணாடி இழை வட இணைப்பு திட்டத்தை சுமார் ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பணி இப்போது முடிந்துவிட்டது
என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,
இன்று அதை வெளியிடுவதற்கான நல்ல அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. சென்னை
முதல் போர்ட் பிளேர், போர்ட்
பிளேர் முதல் லிட்டில் அந்தமான் மற்றும் போர்ட் பிளேர் முதல் ஸ்வராஜ் தீவு வரை, அந்தமான்-நிக்கோபாரின் பெரும் பகுதியில் இந்தச் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
முடிவில்லாத
வாய்ப்புகள் நிறைந்த இந்த இணைப்புக்காக, இந்த வசதிக்காக
அந்தமான்-நிக்கோபார் மக்களை நான் வாழ்த்துகிறேன். சுதந்திர
தினத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 15க்கு ஒரு வாரம் முன்பு அந்தமான்
மக்களுக்கு இது ஒரு வகையான அன்பான பரிசாக நான் பார்க்கிறேன்.
நண்பர்களே,
கடலுக்குள்
சுமார் 2300 கிலோமீட்டர்
தூரத்திற்கு கண்ணாடி இழை வடங்களை இடுவதற்கான இந்தப் பணியை குறித்த காலத்திற்கு முன்னரே
முடித்துள்ளது மிகவும் போற்றத்தக்கது.
ஆழ்கடலில் சர்வே செய்வது, கேபிளின் தரமான பராமரிப்பை தொடர்ந்து வைத்திருப்பது மற்றும்
சிறப்பு கப்பல்கள் மூலம் கேபிளை இடுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மேலே இருந்து
அதிக உயரமான அலைகள், புயல்கள்
மற்றும் பருவமழைகளின் குறுக்கீடுகள் இருந்தன. இந்தத் திட்டம் பெரியது, சவால்கள் அதிகம். பல ஆண்டுகளாக இந்த
வசதி தேவைப்பட்டாலும், அதைச் செய்ய
முடியாது என்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து இந்தப்
பணி முடிந்துவிட்டது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றையும் ஸ்தம்பிக்க
வைத்த கொரோனா போன்ற ஒரு பேரழிவு கூட இந்த வேலையை முடிப்பதை நிறுத்த முடியவில்லை.
தோழர்களே
நாட்டின்
கடின உழைப்பாளிகளான இக்குடிமக்களுக்கு நவீன தொலைத் தொடர்பு இணைப்பை வழங்குவது
நாட்டின் பொறுப்பாக இருந்தது, அதன் நிகழ்கால
மற்றும் எதிர்கால வரலாற்றிற்கு இது மிகவும் முக்கியமானது. இன்று, ஒரு பழைய கனவை அணி அர்ப்பணிப்புடன், மிகவும் அர்ப்பணிப்புள்ள அணியால் பலித்துள்ளது. இந்தத்
திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு உழைப்பாளியையும் நான் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
நண்பர்களே
இத்தகைய
சவாலான பணிகளை எப்போது செய்ய முடியும் என்றால், நாம் எப்போது
முழுமையான அர்ப்பணிப்புடன், முழுத்
திறனுடன் செய்கிறோமோ அப்போதுதான் செய்ய முடியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும், ஒவ்வொரு பகுதி மக்களின் இதயத்திலிருந்தும், (மைய நிலப்பகுதியிலிருந்து இந்தத் தீவுகளுக்கு இடையெ உள்ள) தூரத்தினை இணைக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணமாகும்.
எங்கள் திட்டம் என்னவென்றால், நாட்டின்
ஒவ்வொரு நபரும் நவீன வசதிகளுடன் ஒவ்வொரு பகுதியையும் அடைய வேண்டும், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க வேண்டும். நாட்டின்
பாதுகாப்புடன் தொடர்புடைய எல்லைப் பகுதிகள் மற்றும் கடல் பகுதிகளை விரைவாக
அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே.
நண்பர்களே,
அந்தமான்-நிக்கோபரை நாட்டின் பிற பகுதிகளுடனும் உலகத்துடனும் இணைக்கும் இந்த கண்ணாடி
இழை வடத் திட்டம் எளிதான வாழ்க்கைக்கான எங்கள் குறிக்கோளின் அடையாளமாகும். இப்போது
அந்தமான்-நிக்கோபார் மக்களும் மொபைல் இணைப்பு மற்றும் வேகமான
இணையத்தின் அதே மலிவான மற்றும் நல்ல வசதிகளைப் பெற முடியும். இதற்காக இந்தியா இன்று முழு உலகிலும் முன்னணியில் உள்ளது. இப்போது
அந்தமான்-நிக்கோபார் மக்கள்,
சகோதரிகள், குழந்தைகள், இளைஞர்கள், வர்த்தகர்கள்
மற்றும் வணிகர்கள் ஆகியோரும் டிஜிட்டல் இந்தியாவின் அனைத்து சலுகைகளையும் நாட்டின்
பிற பகுதி மக்களைப் போல பெற முடியும். ஆன்லைன் கல்வி, சுற்றுலா, வங்கி, ஷாப்பிங் அல்லது மருத்துவம் ஆகியவற்றை இப்போது
ஆயிரக்கணக்கான அந்தமான் மற்றும் நிக்கோபார் குடும்பங்களும் ஆன்லைனில் பெற
முடியும்.
நண்பர்களே,
இன்று, அந்தமானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த
வசதியினால் பெரும் நன்மை கிடைக்கும். சிறந்த இணையச் சேவை இன்று எந்தவொரு சுற்றுலாத்
தலத்தின் முதல் முன்னுரிமையாக மாறியுள்ளது. முன்னதாக, நாட்டின் மற்றும் உலக சுற்றுலாப் பயணிகளுக்கு மொபைல்
மற்றும் இணைய இணைப்பு சரிவரக் கிடைக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து தனது
குடும்பத்தினரிடமிருந்தும், அவரது
வியாபார தொடர்புகளிலிருந்தும் துண்டிக்கப்பட்டனர். இப்போது இந்த குறைபாடும்
முடிவுக்கு வரப்போகிறது. இப்போது இணையம் நன்றாக இருக்கும், எனவே மக்கள் அதிக நேரம் செலவழிக்க அங்கு வருவார்கள் என்று
நான் நம்புகிறேன். மக்கள் அதிகமாக தங்கும்போது,
அங்குள்ள உணவகங்களிலும், அந்தமான்-நிக்கோபார்
கடலை அனுபவிக்கவும், அதனால் வேலைவாய்ப்பில்
பெரும் தாக்கம் ஏற்படவும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களே
அந்தமான்
நிக்கோபார் இந்தியாவின் பொருளாதார-மூலோபாய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின்
முக்கிய மையமாகும். இந்தியப் பெருங்கடல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின்
வர்த்தக மற்றும் மூலோபாய வலிமையின் மையமாக இருந்து வருகிறது. இப்போது
இந்தோ-பசிபிக் வர்த்தக மற்றும் ஒத்துழைப்பின் புதிய கொள்கை மற்றும் நடைமுறையை
இந்தியா பின்பற்றி வருவதால், அந்தமான்-நிக்கோபார் உள்ளிட்ட நமது தீவுகளின் முக்கியத்துவம்
அதிகரித்துள்ளது. ‘கிழக்குப் பகுதியில் அதிக செயல்பாடு’ கொள்கையின்
கீழ், கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் கடலுடன்
இணைக்கப்பட்ட பிற நாடுகளுடனான இந்தியாவின் வலுவான உறவுகளில் அந்தமான் மற்றும்
நிக்கோபரின் பங்கு மிக அதிகமாக உள்ளது மற்றும் அதிகரிக்கப் போகிறது. புதிய
இந்தியாவில், அந்தமான்-நிக்கோபார் தீவுகளின்
இந்த பங்கை வலுப்படுத்த 3 ஆண்டுகளுக்கு
முன்பு ‘தீவு மேம்பாட்டு நிறுவனம்’
உருவாக்கப்பட்டது. இன்று, அந்தமான்-நிக்கோபார்
ஆண்டுகளில் முடிக்கப்படாத திட்டங்கள் இப்போது விரைவாக நிறைவடைவதை நீங்கள்
காண்கிறீர்கள்.
தோழர்களே,
அந்தமான்-நிக்கோபார் பகுதியின் 12 தீவுகளில் ‘அதிக பாதிப்பு திட்டங்கள்’ விரிவுபடுத்தப்படுகின்றன.
மொபைல் மற்றும் இணைய இணைப்பின் ஒரு பெரிய சிக்கல் இன்று தீர்க்கப்பட்டுள்ளது. இது
தவிர, சாலை,
வான்வழி மற்றும் நீர் வழியான இணைப்பும் பலப்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும்
மத்திய அந்தமானின் சாலை இணைப்பை வலுப்படுத்த, இரண்டு பெரிய பாலங்கள் மற்றும் என்.எச்-4ஐ அகலப்படுத்துதல்
ஆகியவை விரைவாக செயல்பட்டு வருகின்றன. போர்ட்பிளேர் விமான நிலையத்தில் ஒரே
நேரத்தில் 1200 பயணிகளைக் கையாளும்
திறன் வரும் சில மாதங்களில் தயாராக இருக்கும்.
இவை
தவிர, டிக்லிபூர், கார் நிக்கோபார் மற்றும் காம்ப்பெல் வளைகுடாத்
தீவுகளில் விமான நிலையங்களும் இயக்கத்திற்கு தயாராக உள்ளன. ‘லாங்
ஐலெண்ட்’ தீவில் பயணிகள் முனையம், ஸ்வராஜ் தீவில் மிதக்கும் ஜெட்டி, ஷாஹீத் தீவு மற்றும் லாங் தீவு போன்ற தீவுகளில்
கடலின் மேல் மிதக்கும் விமானநிலையம் போன்ற உள்கட்டமைப்பும் வரும் மாதங்களில்
தயாராக இருக்கும். இதன் பின்னர்,
உடான் திட்டத்தின் கீழ் கடல் விமான சேவை இங்கு தொடங்கப்படும். இது ஒரு
தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு இணைப்பை வலுப்படுத்தும், மேலும் இது உங்கள் பயண நேரத்தையும்
குறைக்கும்.
நண்பர்களே,
தீவுக்கும்
நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையில் நீர் இணைப்பு வசதியை அதிகரிக்க, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் நான்கு கப்பல்களும்
வரும் மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். அடுத்த ஒராண்டில், பெரிய கப்பல்களைச் சரிசெய்யும் வசதி இந்தத் தீவுகளில்
உருவாக்கப்பட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். இது உங்கள் நேரத்தை
மிச்சப்படுத்தும், செலவுகளைக் குறைக்கும் மற்றும் வேலை
வாய்ப்புகளையும் உருவாக்கும். இது மீன்வளத் துறைக்கும் பெரிதும் பயனளிக்கும்.
நண்பர்களே
அந்தமான்-நிக்கோபார் தீவுகள் வரவிருக்கும் காலங்களில் ‘போர்ட்
லேண்ட் டெவலப்மென்ட்டின்’ மையமாக உருவாக்கப் போகிறது.
அந்தமான் நிக்கோபார் உலகின் பல துறைமுகங்களிலிருந்து மிகவும் சரியான
தொலைவில் அமைந்துள்ளது. இன்று, முழு
உலகமும் துறைமுகங்களின் வலையமைப்பும் அவற்றின் இணைப்பும் எந்த நாட்டில் சரியாக இருக்கிறதோ
அந்நாடு 21ஆம் நூற்றாண்டின் வர்த்தகத்தை
துரிதப்படுத்தும் எனக் கருதுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அந்தமான்-நிக்கோபாரில் உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள்
அதை வளர்ச்சியின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.
நண்பர்களே,
இன்று, இந்தியா தன்னிறைவுக்கான உறுதிமொழியுடன் முன்னேறி வருகிறது. உலகளாவிய உற்பத்தி மையமாக,
உலகளாவிய வழங்கல் மற்றும் மதிப்புச் சங்கிலியில் ஒரு முக்கிய நாடாக தன்னை
நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இந்நிலையில் எங்கள் நீர்வழிகள் மற்றும் எங்கள் துறைமுக வலையமைப்பு
அதிகாரம் பெறச் செய்வது மிகவும் முக்கியம். கடந்த 6-7
ஆண்டுகளாக துறைமுக மேம்பாடு மற்றும் துறைமுக நில மேம்பாட்டுக்காக
மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நாட்டுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன.
இன்று, நாட்டின் கடற்கரை இல்லாத மாநிலங்களை பெரிய
கடல் துறைமுகங்களுடன் இணைத்து,
நதி நீர்வழிகளின் ஒரு பெரிய வலையமைப்பை நாம் உருவாக்கி வருகிறோம். துறைமுக கட்டமைப்பின்
வளர்ச்சியில் சட்டரீதியான தடைகளும் தொடர்ந்து அகற்றப்படுகின்றன. அரசாங்கத்தின்
கவனம் கடலில் வணிகத்தை எளிதாக்குவது மற்றும் கடல்சார் தளவாடங்களை எளிதாக்குவது. இதற்கென
உலகின் மிகப்பெரிய ஒற்றை சாளர தளத்தை உருவாக்குவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
நண்பர்களே,
இதுபோன்ற
பல முயற்சிகள் காரணமாக, இப்போது
நாட்டின் துறைமுக வலையமைப்பின் திறன் விரிவடைந்து வருகின்றது. மூன்று
தசாப்தங்களின் காத்திருப்புக்குப் பிறகு,
மேற்கு கடற்கரையில் இந்தியாவின் முதல் ஆழமான கிரீன்ஃபீல்ட் கடல்
துறைமுகத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கிழக்கு கடற்கரையில் ஆழமான
உள் துறைமுகத்தின் கட்டுமானமும் வேகமாக நடந்து வருகிறது.
இப்போது
சுமார் 10 ஆயிரம் கோடி
மதிப்பீட்டில் கிரேட் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ் ஷிப்மென்ட் துறைமுகத்தை உருவாக்க
உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டத்தை வரும் 4-5 ஆண்டுகளில் முடிக்க
வேண்டும். இந்த துறைமுகம் தயாரானதும்,
பெரிய கப்பல்களும் இங்கு தங்க முடியும். இது கடல் வர்த்தகத்தில் இந்தியாவின்
பங்கை அதிகரிக்கும், நமது
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.
நண்பர்களே,
இன்று, அந்தமான்-நிக்கோபாரில் நவீன உள்கட்டமைப்பு
தயாரிக்கப்படுவது போல, நீல
பொருளாதாரமும் துரிதப்படுத்தப்படும். மீன்வளம்,
மீன்வளர்ப்பு மற்றும் கடல் களை வளர்ப்பு ஆகியவை நீல பொருளாதாரத்தின் ஒரு
முக்கிய பகுதியாகும். கடற்பாசியின் நன்மைகள் இன்று உலகில் விவாதிக்கப்படுகின்றன, பல நாடுகள் அதன் சாத்தியங்களை ஆராய்ந்து வருகின்றன.
அந்தமான் மற்றும் நிக்கோபாரில் அதன் திறனை ஆராய போர்ட்பிளேயரில் செய்யப்பட்ட முன்னோட்டத்
திட்டத்தின் முடிவுகள் ஊக்கமளிப்பதாக உள்ளதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்போது தீவுகளில் அதன் சாகுபடியை ஊக்குவிக்க ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச்
சோதனைகள் பெரிய அளவில் வெற்றிகரமாக இருந்தால்,
அதை நாட்டின் பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இது குறிப்பாக நமது
மீனவர்களுக்கு பயனளிக்கும். இந்த தசாப்தத்தில் எங்கள் முயற்சிகள்
அந்தமான்-நிக்கோபருக்கு மட்டுமல்லாமல், அங்குள்ள
மக்களுக்கும் புதிய வசதிகளை வழங்கும், அதனால் உலக
சுற்றுலா வரைபடத்தில் ஒரு முக்கிய இடமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.
மொபைல்
போன் மற்றும் இணைய இணைப்பின் இந்த நவீன வசதிக்காக நீங்கள் அனைவரும் அந்தமான்-நிக்கோபார்
மக்களை மீண்டும் வாழ்த்துகிறேன், இது கொரோனா
நேரம்.
இந்நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க நான் பிரார்த்தனை செய்வேன். நீங்கள்
நன்றாக இருங்கள், உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக
இருங்கள். கொரோனாவின் இந்த நேரத்தில், எப்போதும்
இரண்டு கெஜம் தொலைவினைப் பின்பற்றவும். முகக்கவசம் அணியவும்.
இந்த
விருப்பத்துடன், இந்த
சுதந்திரத்தின் தபோபூமிக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னர் இன்று என்னால் முடிந்ததைச் செலுத்த வாய்ப்பு
கிடைத்தது. சுதந்திர பண்டிகைக்கு முன்னதாக ஆகஸ்ட் 15க்கு
முன்னர் இந்த மிகப் பெரிய சந்தர்ப்பத்திற்காக உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், மேலும் பிரகாசமான
எதிர்காலத்திற்காக ஒரு புதிய பாய்ச்சலுக்கு முன்வருமாறு உங்களை அழைக்கிறேன்.
மிக்க நன்றி.
No comments:
Post a Comment