Tuesday, March 20, 2012


மார்ச்சு 21 உலக கவிதை நாள்
நானும் ஒரு கவிதை கிறுக்கியிருக்கிறேன். படித்து மகிழுங்கள்
வாழ்க்கை என்பது பெரும்பயணம்
அதில் வரவு செலவுகளில் நம் கவனம்
காட்டு மரம் உதிர்க்கும் சில இலை போலே
நம் கதையில் நடக்கும் சில நிகழ்வுகளே !
வாழ்க்கை என்பது நல் இசை போலே
அதில் மங்கல நாதசுவர இசை உண்டு
சோகம் இழைக்கும் குழலிசையும் உண்டு
(ஏதாயினும்)
இசை நல்லதுதான் நல் மகவின் குரல் போலே
மாற்றம் மட்டுமே நன்மை தரும்
மனம் மாறாவிடிலோ தீமை வரும்
ஷெல்லி அன்று சொன்னது போல்
பனி வந்தால் அதை விலக்கிட வெயில் வரும்.
கு வை பா